Saturday, February 4, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை(இன்னமும் காதலி கிடைக்காத ஆண் சிங்கங்களுக்குச் சமர்ப்பணம்)


மீண்டும் ஒரு குறுநாவலுடன் உங்களுடன் சேர்ந்து பயணிக்கப் போகின்றேன்.

அன்று எட்டு மணி தாண்டிப் பதைபதைப்புடன் அலுவலகத்துக்குள் நுழைந்த தனுவை கண்களை மூடித்திறந்ததன் மூலம் வணக்கம் கூறிவிட்டு காதலனுடன் தொடர்ந்து சிணுங்க ஆரம்பித்தாள் சத்துரி.அவள் அருகில் இருந்த ருவந்திக்கா இவனைக் கண்டுக்கவே இல்லை.அவள் அவளவனுக்கு குறும்செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தாள்.


இப்பொழுதெல்லாம் காதலர்களைக் காணும் போது தனுவிற்கு அடிமனதில் விவரிக்க  முடியாத ஏக்கம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இத்தனைக்கும் பெண்களைக் கண்டுவிலத்தியோடும் ஆளுமல்ல அவன்.ஆனால் காதல் மட்டும் அவனுக்கு கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்து கண்சிமிட்டிக் கொண்டிருகின்றது.பல்கலைக்கழக வாழ்கையும் முடிந்தாகி விட்டது.இன்னமும் நம் தேவதை நம் இதய வகுப்புக்கு வந்துசேரவில்லை.வாழ்கையில் மட்டும் தான் டபுள் ப்ரோமோசனோ என அவன் மனம் வேற்று சுருதியில் துடித்துக்கொண்டிருக்கின்றது.




காலைச் உணவைச் சாப்பிடுவதற்கு மற்றவர்கள் அழைத்த போதும்,சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன்,என்று பொய் சொல்லிவிட்டு கம்ப்யூட்டர் உடன் இரண்டறக் கலந்துவிட்டான்.உணவை முடித்துவிட்டு வந்த சக தோழிகள் சீண்டலுடனையே வேலையை ஆரம்பித்தனர்.ஏண்டி தனுவிற்கு இன்னம் லவ் செட்டாகவில்லை என்று கூறிவிட்டு அவனைக் கடைக்கண்ணால் பார்த்த சத்துரி,சற்று குரலைத் தாழ்த்தி “அவனுக்கு ஏதும் பிசிக்கல் ப்ரோப்லமோ............என்று அருகில் இருந்தவள் காதில் குசுகுசுத்தது,தனுவின் செவிப்பறையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.அவளை முறைத்துக் கொண்டு எழுந்தவன்,விறு விறு என்று வெளியே வந்துவிட்டான்.வாயிலே சிகெரட்டைப் பொருத்தியவன்,சே.......அவளுடைய சந்தேகத்தை தீர்த்துவச்சிட்டு வந்திருக்கணும்,அவளுடைய பகிடி சேட்டைக்கு ஓர் அளவு மீறிப்போய்ச்சு என்று தன் மனதுக்குள் எரிமலையாய் குமுறிக்கொண்டிருக்கும் போது தோளைப் பற்றின ஒரு கரங்கள்.


திரும்பிப் பார்த்தான்........ சத்துரி,முகம் முழுக்கப் பயத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.சாரிடா,நான் பகிடிகுத்தான் அப்படிச் சொன்னேன்,உனக்கு பிடிக்காட்டி சாரிடா என்றாள் குழைவாக.பொத்திடடுப் போடி!!!பெருசாக் கதைக்க வந்திட்டா ..................என்று தனு கத்திய சத்தம்,கண்டிபாக ஆபிசுக்குள்ளும் கேட்டிருக்க வேண்டும்.அவள் மிகவும் சிரமப்பட்டு கண்ணை முட்டிக் கொண்டுவந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றும்,அது அவளது சக்தியை மீறி கன்னத்தால் வழிந்துகொண்டு இருந்தது.அவள் உள்ளுக்குள்ளும் போக முடியாமல் ,அவ்விடத்திலும் நிற்க முடியாமல் தவிர்த்த அதே தவிப்பையே அவனும் அனுபவித்துக்கொண்டிருந்தான்.


அவள் உன் நண்பிடா என்று சொல்லி அவன் மனம் கதறத்தொடங்கியது.
தன் கைக்குட்டையை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு உள்ளே செல்லக் காலடி வைத்தவன்,பின்னே திரும்பி அவள் தலையை உலுக்கிவிட்டு உள்ளே நடந்தான்.அவளும் அவனைத் தொடர்ந்தாள்.



தொடரும்........................ 

4 comments:

Unknown said...

@இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்
நம்ம நாவலுக்கு யாரோ ஒரு புண்ணியவான் காமெண்ட் பண்ணிருக்கின்றார்,என்று விழுந்தடிச்சுப் போய்ப் படிச்சா விளம்பரம் பண்ணிருக்கார்கள்.....
ம்ம்ம் .....
சம்பாரிக்கலாம் சம்பாரிக்கலாம்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல (நாவல்) கதை ! வாழ்த்துக்கள் ! நன்றி சார் !

Unknown said...

@திண்டுக்கல் தனபாலன்
ரொம்ப நன்றி சார்.
இப்பொழுதெல்லாம் சினிமா கிசு கிசு,விமர்சனம் போன்றவற்றுக்குத்தான் வாசகர் வட்டம் அதிகம்.
கதை,நாவல் என்று எழுதத்தான் வேண்டுமா என்று குழம்பிக்கொண்டு இருகின்றேன்.

Unknown said...

@விச்சுமிக்க நன்றி.எனது பதிவையும் காதலர் தினத்தொகுப்பில் இணைத்தமைக்கு.

Post a Comment